தென்காசி

.தமிழக முதல்வர் தேர்தல் கால வாக்குறுதியான தமிழக அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அழுல்படுத்துவது என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முழுமைக்கும் ஆயிரம் அரசு அலுவலகம் முன்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற ஜிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில முடிவின் அடிப்படையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வீரகேரளம்புதூர், ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மதியஉணவு இடைவேளையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்திருமலை ஆண்டவர் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் கங்காதரன் ஆர்ப்பாட்ட கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஊரக வளர்ச்சி துறை சங்க மாவட்ட இணைச்செயலாளர் பழனி வாழ்த்துரை வழங்கினார். முடிவில் செந்தூர் பாண்டி நன்றியுறை ஆற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் பொதுசுகாதாரத்துறை ஊழியர்கள் 40 பெண்கள் உள்ளிட்ட 60 பேர் கலந்துகொண்டனர்.

அதனை யெடுத்து ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டத்திற்கு வட்டார வருவாய்த்துறை அலுவலர் சங்கம் திருப்பதி தலைமையில் நடைப்பெற்றது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் கங்காதரன் ஆர்ப்பாட்ட கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஊரக வளர்ச்சி துறை சங்க மாவட்ட இணைச்செயலாளர் பழனி வாழ்த்துரை வழங்கினார்..
முடிவில் பார்த்த சாரதி நன்றியுரை கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் 15 பெண்கள் உட்பட 40 பேர் கலந்து கொண்டனர்.
பின்னர் வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் அலுவலகம்
முன்பு நடந்த ஆர்பாட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆதிநாரயணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் கங்காதரன் ஆர்ப்பாட்ட கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஊரக வளர்ச்சி துறை சங்க மாவட்ட இணைச்செயலாளர்பழனி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 10 பெண்கள் உட்பட 30 பேர் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *