ராஜபாளையம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரி மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாக கரிசல் இலக்கிய கழகம் இணைந்து நிகழ்த்தும் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் தமிழ் துறை சார்பாக கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு ஆண்டாளின் பக்தி பற்றியும், கரிசல் இலக்கிய சிறப்புகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
இக்கருத்தரங்கில் கவிஞர் செல்லா,சிதம்பரநாதன், காந்தி துரை,அருள் மொழி ஆகியோர் ஆண்டாளின் திருப்பாவை பற்றி எடுத்துரைத்தனர்.கல்லூரி முதல்வர் ஜமுனா வரவேற்புரையாற்றினார்.கல்லூரி தாளாளர் எ.கே.டி.கிருஷ்ணம ராஜூ வாழ்த்துரை வழங்கினார்.தமிழ் துறை தலைவி பால் நந்தினி நன்றியுரை கூறினார்.