கும்பகோணம் கிஸ்வா சத்திய சோலை சார்பில் புத்தக கண்காட்சி துவக்க விழா
கும்பகோணம்.
கும்பகோணம் கிஸ்வா – சத்திய சோலை சார்பில் புத்தக கண்காட்சி துவக்க விழா கும்பகோணம் அல்-அமீன் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.
விழாவிற்கு கிஸ்வா தலைவர் பி.எஸ். முகமது யூசூப் தலைமை தாங்கினார்.சத்திய சோலை தலைவர் முகமது யூனுஸ், செயலாளர் ஜாஹிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அல் அமீன் பள்ளி தாளாளர் எம்.என்.முகமது ரபி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக துணை மேயர் சுப. தமிழழகன், தொழில் அதிபர் பி.எஸ்.சேகர் ஆகியோர் புத்தக கண்காட்சி விற்பனையை தொடங்கி வைத்தனர். புத்தக கண்காட்சி வருகிற 27 ந் தேதி வரை 4 நாட்கள் நடைப்பெறுகிறது. புத்தக கண்காட்சியில் பல்வேறு பிரிவுகளில் புத்தகம் இடம் பெற்றுள்ளது மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களுக்கு சலுகை விலையில் புத்தக கண்காட்சியில் பயன் பெற வேண்டும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
விழாவில் கிஸ்வா நிர்வாகிகள் வர்த்தக பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில்
திட்ட குழு தலைவர் அன்சர் அலி நன்றி கூறினார்.