செய்தியாளர்.இரா.மோகன்

மயிலாடுதுறையில் நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இந்திய விளையாட்டு ஆணையம் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்:-
நாட்டின் 76வது குடியரசு தினம் கோலாகலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி குடியரசு தினவிழா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சமாதான புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். பின்னர் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் 262 நபர்களுக்கு நற்சான்றிதழ்களும் 176 பயனாளிகளுக்கு சுமார் 8 கோடியே 52 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.