அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டு அஞ்சலி………
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கொடுவாய் பேருந்து நிறுத்தம் அருகே திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட மாணவரணி செயலாளர் பரணி குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உடுமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பல்லடம் எம்எல்ஏ எம் எஸ் எம் ஆனந்தன், முன்னாள் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் செல்:9842427520.
26-01-2025.