கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி கிராமத்தில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான சென்னை நார் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது இத்தொழிற்சாலையின் அருகே ஸ்ரீ லட்சுமி நாராயணா என்கிற தனியார் மண்டபம் உள்ளது இந்த மண்டபத்தில் நடைபெற்றுள்ள மஞ்சள் நீராட்டு விழாவிற்காக இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்
அப்போது ஏற்பட்ட தீப்பொறி அருகே உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் உள்ள தென்னை நார்மீது விழுந்து குபு குபுவென தீ பற்றி எரிய தொடங்கியது
இதனை கவனித்த உரிமையாளர் வெங்கடேசன் உடனடியாக போச்சம்பள்ளி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார் அதன் பேரில் அங்கு வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் சுமார் பத்து டன் அளவில் தென்னை நாரில் எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அனைத்தனர் இச்சம்பவம் குறித்து பாரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்