செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று 76 ஆவது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ் விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் என். அனந்தராஜன் அனைவரையும் வரவேற்றார். தேசூர் பேரூராட்சியின் சேர்மன் திருமதி ராதா ஜெகவீரபாண்டியன் மற்றும் கவுன்சிலர்கள், வட்டார கல்வி அலுவலர் தே.ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் வரலட்சுமி, உறுப்பினர்கள் பெரியோர்கள் மாணவர்கள் மற்றும் அமைப்பாளர் புவனேஸ்வரி மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளியின் ஆசிரியர் பச்சையப்பன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.