திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முதன்மை நீதிபதி.முத்துசாரதா அவரது தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தலைமை உரை ஆற்றினார்.
இவ்விழாவில் POCSO நீதிபதி.வேல்முருகன், SC/STநீதிபதி.முரளிதரன், குடும்பநல நீதிபதி.விஜயகுமார், மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி.சரண், தலைமை குற்றவியல் நடுவர்.கனகராஜ், முதன்மை சார்பு நீதிபதி.தீபா, கூடுதல் சார்பு நீதிபதி. கோகுலகிருஷ்ணன், மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு சார்பு நீதிபதி.சோமசுந்தரம், முதன்மை உரிமையியல் நீதிபதி.ரெங்கராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் சௌமியா மேத்யூ, பயிற்சி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்..திருவேணி, செயலாளர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சென் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நடனமாடி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இறுதியாக தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நன்றியுரை கூறினார்.