திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நாட்டின் 76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்.பூங்கொடி இ.ஆ.ப., தேசியக் கொடியை ஏற்றினார்கள். மேலும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர்.வந்திதா பாண்டே, இ.கா.ப, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப., தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் 69 காவல்துறையினருக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கமும் மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 100 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர்.பூங்கொடி இ.ஆ.ப.வழங்கி பாராட்டினார்.