கடத்தூர் ஒன்றியம் புட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் , 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றன , இப்பள்ளியில், நேற்று நடந்த குடியரசு தின விழாவில் , கடந்த 20 23.24ம் ஆண்டு பொது தேர்வில் பள்ளி அளவிலே சிறப்பிடம் பிடித்த பனிரெண்டாம் வகுப்பு வரலாறு பிரிவு மாணவி கீர்த்திகா, முதல் மதிப் பெண் பெற்றார்,
இவரைப்போல் மற்ற மாணவர்களும் தேர்வில் நல்லமுறையில் படித்து. அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் .நமது பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்கவேண்டும் ,என சால்வை அணிவித்து அவருக்கு , பள்ளி தலைமையாசிரியர் எஸோந்திரா சார்பில் ரூ..5000. வழங்கி பாராட்டு தெரிவித்தார் ,
இதில் பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் வெங்கடாஜலபதி, பள்ளி மேலாண்மை குழு தலைவி விஜயா, உள்ளிட்ட பள்ளி இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள். அலுவலக பணியாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்,