திண்டுக்கல் கோபால் நகர் விஸ்தரிப்பு செல்போன் கோபுரம, விவேகானந்த நகரில் விநாயகர் கோவில் அருகே பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பொது சாலையில் பகுதியில் குப்பைகள் தேங்கி கிடைக்கின்றன.இக்குப்பைகளை ஆடு,மாடுகள் நாய்கள் அதை தின்பதுடன், அலங்கோலப்படுத்தி செல்கின்றது.இதனால் நோய் தோற்று மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறாகவும் , சாலைகளில்
பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உள்ள சாலையால் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது.
இதனை மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியும், சாலையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமா? குப்பைகளை கொட்ட குப்பை தொட்டியை பாதிக்கப்பட்ட இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் வைக்க வேண்டி சமூக ஆர்வலர்கள் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.