திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசின ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 76-வது குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மு. நாவளவன் தலைமை தாங்கினார், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சி. சீனிவாசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க. செல்வம் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசகர் பா. சிவனேசன், வலங்கைமான் பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித் தமிழ் மாறன், அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோம. மாணிக்கவாசகம், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சிவ. செல்லையன், பொருளாளர் சிங்குத்தெரு எஸ். ஆர். ராஜேஷ், இணைச் செயலாளர் எஸ். ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சு. சுமத்ரா, துணைத் தலைவர் எம். பிரேமா மற்றும் உறுப்பினர்கள், பள்ளி முதுகலை ஆசிரியர் ம. பூபதி, ஆசிரியர் மன்ற செயலாளர் கோ. சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் உயர்நிலை உதவி தலைமை ஆசிரியர் கோ. காமராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.