தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி பேரூராட்சியில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றியும் மக்களின் கோரிக்கையை உடனடியாக சரி செய்து சிறப்பாக பணியாற்றியதற்காகவும் சிறந்த பேரூராட்சி செயலர் அலுவலராக வெ கணேசன் அவர்களுக்கு அவர் மக்கள் சேவையை ஊக்குவிக்கும் விதமாக குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா கேடயம் மற்றும் சிறப்பு பரிசு வழங்கி தங்களின் தன்னலமற்ற சேவை தொடர வேண்டும்போது என மனதார வாழ்த்தினார் உடன் வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி இளநிலை உதவியாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்