வலங்கைமானில் உப்பு சத்தியாகிரகம் இயக்கம் இளைஞர் அணி சார்பில் புத்தகத் திருவிழா தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் உப்பு சத்தியாகிரக இயக்க இளைஞரணி சார்பில் புத்தகத் திருவிழா தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உப்பு சத்தியாகிரக இயக்க இளைஞர் அணி திருவாரூர் மாவட்ட தலைவர் குர்ஆன் மைதீன் தலைமை வகித்தார். வலங்கைமான் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர் புத்தகத் திருவிழா விளம்பர பதாகையை திறந்து வைத்து, வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியும் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து காவல்துறை அதிகாரி ஆரிய பகவான் போக்குவரத்து மற்றும் நடைபாதை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கார்மல் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் தலைமை ஆசிரியை ஜோஸ்பின் கலந்துகொண்டு மாணவ,மாணவியர் களுக்கு புத்தகம் வாசித்தலின் அவசியத்தை பற்றியும், எழுதுதகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். தொடர்ந்து வருகை தந்த அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருவாரூரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அனைத்து பெற்றோர்களும், மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டுமாய் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க நகரத் தலைவர் அகமது மைதீன், வலங்கைமான் நகர காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கலியமூர்த்தி, கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பிரதிநிதி கலியமூர்த்தி, கார்மல் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் ஆசிரியை ரேணுகா மற்றும் மாணவர்களும், மாணவிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.