துறையூர் நகராட்சி அலுவலகத்தில் 76 வது குடியரசு தின விழா
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி அலுவலகத்தில் 76 வது குடியரசு தின விழா (ஜனவரி -26) கொண்டாடப்பட்டது.இதில் நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர் மன்னன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.விழாவில் துணைத் தலைவர் மெடிக்கல் ந. முரளி, ஆணையர் சுரேந்திர ஷா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பொறியாளர் மகாராஜன், மேலாளர், சுகாதார ஆய்வாளர் கணேசன், நகரமைப்பு அலுவலர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் வீரமணிகண்டன், அம்மன் பாபு, இளையராஜா, பாஸ்கரன், ஜானகிராமன், செந்தில்குமார், நித்யா கிருஷ்ணகுமார், முத்து மாங்கனி, கௌதமி,ஹேமா, லலிதா மற்றும் அலுவலர்கள், தூய்மை காவலர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்