கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய அரசின் சுற்றுசூழல் வனம் மற்றும் கால நிலை மாற்ற துறையால் அறிவிக்கப்பட்டுள்ள பல்லுயிர் பாதுகாப்பு சுற்றுசூழல் உணர்திறன் மண்டலம் வரைவு அரசாணையை ரத்து செய்திட மத்திய பாஜக அரசை வலியுறுத்தி வால்பாறையில் வரும் 09-02-2025 தேதி எல்பிஎஃப், ஐஎன்டியூசி, ஏஐடியூசி, எல்எல்எஃப், எம்எல்ஃப், உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பில் நடைப்பெற இருந்த உண்ணாவிரத அறப்போராட்டம் வால்பாறை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தை பூச திருவிழாவை கருத்தில் கொண்டு வரும் 13-02-2025 நடந்திட முடிவு செய்யப்பட்டுள்ளதாக எல்.பி.எஃப் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.பி.வினோத்குமார் பொதுச்செயலாளர் தனது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்