
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ள தன்னுடைய பூர்வீக சொந்த கிராமமான திருவீழிமிழலை கிராமத்தில் அவருடைய குலதெய்வ கோவிலான மகா மாரியம்மன் திருக்கோவில் இல் தன்னுடைய மூன்றாவது குழந்தையான ஒரு வயதுடைய ஆண் குழந்தைக்கு அவருடைய உறவினர்கள் முன்னிலையிலும் அவருடைய கிராமத்தார் முன்னிலையிலும் காது குத்தினார். அதன் பிறகு அவருடைய சொந்த கிராமத்தில் உள்ள கிராமத்தார் மற்றும் உறவினர்களுடன் புகைப்படம் எடுத்து அனைவரையும் மகிழ்வித்தார்