துறையூர் ஸ்ரீ பாலாஜி வித்யாலயா பள்ளி சார்பில் போதை ஒழிப்பு மற்றும் இயற்கையை காப்போம் விழிப்புணர்வு பேரணி
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ பாலாஜி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் (பிப்ரவரி -15) நேற்று முன்தினம் போதை ஒழிப்பு மற்றும் இயற்கையை காப்போம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி தலைவர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை உதவி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த போதை ஒழிப்பு மற்றும் இயற்கையை காப்போம் விழிப்புணர்வு பேரணி பேருந்து நிலையத்தில் துவங்கி முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா சென்று நிறைவுற்றது.பேரணியில் மேதையை அழிக்கும் போதையை ஒழிப்போம்,! குடியா குடும்பமா, குடிக்காதே ,! குழந்தையின் வாழ்க்கையை கெடுக்காதே,!சுற்று சூழல் காப்போம்,இயற்கையை நேசிப்போம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி கோஷமிட்டவாறு பள்ளி மாணவர்கள் பேரணியாக சென்று முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் பள்ளி மாணவர்கள் போதை ஒழிப்பு பற்றி தெருக்கூத்து நடத்தி விழிப்புணர்வு செய்தனர். பள்ளி மாணவர்களின் தெருக்கூத்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது.
இதில் பள்ளி தாளாளர் கிஷோர், முதல்வர் சங்கரன், துணை முதல்வர் தினேஷ், பள்ளி நிர்வாக அலுவலர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இப்பேரணியில் உதவி காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்கள் அப்துல்லா, தங்கம் மற்றும் காவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுமார் 150 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்