ராஜபாளையம், திருவள்ளுவர் மன்றத்தின் 59 ஆம் ஆண்டு விழா
நடைபெற்றது!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்,திருவள்ளுவர் மன்றத்தில் வைத்து தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தமிழக அரசின் அய்யன் திருவள்ளுவர் விருது பெற்ற புலவர் மு. படிக்கராமுவை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
மேலும் திருவள்ளுவர் மன்றத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான புலவர் போத்தையா அவர்களின் படத்திறப்பு விழாவும் நடைபெற்றது.
தமிழ்நாடு சீர் மரபினர் வாரிய துணைத் தலைவர் ராசா அருண்மொழி குன்றக்குடி அடிகளார், புலவர் படிக்க ராமு ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
விழாவிற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து, குத்து விளக்கேற்றி, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, விழாவை துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மன்ற நிறுவனர் புலவர் முத்தரசு விழாவில் பங்கேற்று சிறப்பு செய்தார். விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அருளாசி வழங்கி பேசினார் ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையா நன்றி கூறினார்.