குண்டடம் பகுதியில் 25,000 மதிப்புள்ள ஆட்டை பைக்கில் திருடி சென்ற கணவன்-மனைவியை போலீசார் சிசி டி.வி காட்சியை வைத்து தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் அடுத்த நால்ரோடு பிரிவை சேர்ந்தவர் வெங்குடுசாமி,57 விவசாயி.இவர் வீட்டில் ஆடு வளர்த்து வருகிறார்.

ஆடுகளை தாராபுரம்- கொடுவாய் புறவழிச்சாலை நால்ரோடு பிரிவு அருகே விவசாயின் மேய்ச்சல் நிலத்தில் கொட்டகையில் கட்டி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

அதன் பிறகு ஆடுகளை மேய்ச்சல் பகுதியில் விட்டுவிட்டு சாப்பிடுவதற்காக வீட்டுக்குச் சென்று திரும்பி வந்தார். அப்போது ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது, 1,ஆடுகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

பின், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், கணவன் மனைவி இருவரும் பைக்கில் வந்து ஆட்டை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது இதுகுறித்து வெங்குடுசாமி அளித்த புகாரின் பேரில், குண்டடம் போலீசார் வழக்குப் பதிந்து ஆடுகளைத் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தற்போது கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கூட்டு களவாணியாக ஒரு ஆட்டை பிடித்து பைக்கில் வைத்துக் கொண்டு நால்ரோடு, பிரிவை தாண்டி செல்லும் சிசிடிவி. காட்சி வெளியாகி விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரித்து உடனடியாக திருடிய கணவன்-மனைவியைப் பிடித்து அவர்களிடம் இருந்து ஆட்டை மீட்டு தர வேண்டும் என விவசாயி வெங்குடுசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *