வால்பாறை நகராட்சி ஆணையாளர் இல்லத்திருமண வரவேற்பு விழா நகரச்செயலாளர் சுதாகர் பங்கேற்பு
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வருபவர் ரகுராமன் இவரின் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் 16 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளரும் நகர் மன்ற உறுப்பினருமான ஜே.பி.ஆர். என்ற ஜே.பாஸ்கர், முன்னால் கவுன்சிலர் சி.செல்வம், மாவட்ட திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கே.பி.எஸ்.சத்தியமூர்த்தி, உதயநிதி நற்பணி மன்ற நிர்வாகி மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்