வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிப்ரவரி 18 ந் தேதி பருத்தி ஏலம் நடைபெற்றது.திருச்சி விற்பனைக் குழு செயலர் சி. சொர்ண பாரதி தலைமையில் வேளாண்மை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தி.தங்கதுரை, உரிம இட ஆய்வாளர் அ.அன்புசெல்வி,மேற்பார்வையாளர் சி.மோகனா மற்றும் வேளாண்மை விற்பனைத் துறை அலுவலர்கள் மேற்பார்வையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த பருத்தி ஏலத்தில் மொத்தம் 1673. 36 குவிண்டால் பருத்தி 1,10,44,738 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.அதிகபட்சம் ஒரு குவிண்டால் ரூபாய் 7,569 க்கும், மாதிரி விலை ரூபாய் 6,600 க்கும், குறைந்தபட்ச விலை ரூபாய் 6,089 க்கும் ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில் பெரம்பலூர், கொங்கனாபுரம், பண்ருட்டி, மகுடன்சாவடி, கும்பகோணம், செம்பனார் கோயில், நாமக்கல், பெரகம்பி, விழுப்புரம்,கரூர்
வியாபாரிகள் மற்றும் 400 க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.