தென்காசி மாவட்ட அட்வகேட் அசோசியேசன் சார்பில்
மத்திய அரசு கொண்டுவரும் புதிய வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதா வழக்கறிஞர் நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி வழக்கறிஞரகள் தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டு வர இருக்கும் வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதா வழக்கறிஞர் நலனுக்கு எதிராகவும், வழக்கறிஞர்களின் குரல் வளையை நசுக்குகின்ற முறையிலும், வழக்கறிஞர்களின் தொழில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், வழக்கறிஞர்களின் உரிமையை பாதிக்கின்ற வகையிலும் இருக்கின்ற சட்டத்திருத்த மசோதாவினை எந்தகால கட்டத்திலும் அமுல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி தென்காசி மாவட்ட அட்வகேட் அசோசியேசன் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட அட்வகேட் அசோசியேசன் தலைவர் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு துணைச் சேர்மனுமான வழக்கறிஞர் ஆர்.மாடக்கண் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட அட்வகேட் அசோசியேசன் செயலாளரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு இணைச் செயலாளருமான .ஏ.கார்த்திக்குமார் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்மத்திய அரசு கொண்டுவரும் புதிய வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்தும், கண்டித்தும், அதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும் கோஷமிட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்ட அட்வகேட் அசோசியேசன் சங்கத்தின் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் இ.எஸ்.கைலாசம், எஸ்.சண்முகவேல் டி.பொன்மாலா , எம்.நவநீத கிருஷ்ண கண்ணன்,எம்.அர்ச்சனா, எம்.ஏ.அப்துல் மஜீத், ஆர்.ஜெகதீசன் கே .பி.குமார் பாண்டியன், எம். தாகிராபேகம், ஏ.எம்.இருதயராஜ், எம்.ஜான்தாமஸ்கவுணடர் , ஏ.வெங்கடேஷ், தாஹிரா பேகம், முருகன், புகழேந்தி, பூசை துரைச்சி, இசக்கிராஜ், திருமலைக்குமார், என்.கே.சுந்தர், ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் தென்காசி மாவட்ட அட்வகேட் அசோசியேசன் செயலாளரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் இணைச் செயலாளருமான வழக்கறிஞர் .ஏ.கார்த்திக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.