மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்
பணியாளர்களின் மன அழுத்தத்தை போக்க நிறைவாழ்வு பயிற்சி முகாம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் துணை ஆணையர்
(தலைமையிடம்) ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்புகளை மன அழுத்த மேலாண்மை பயிற்சியாளர் லோகமணி நடத்தினார். இப்பயிற்சி வகுப்பில் 100க்கும் மேற்பட்ட அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
