புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் டெங்கு மலேரியாவை ஒழிக்கும் வகையில் சப்தகிரி அறக்கட்டளை சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணியை முன்னாள் சபாநாயகர் விபி சிவக்கொழுந்து இன்று தொடங்கி வைத்தார்
புதுச்சேரி இலாசுப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் கடந்த சில நாட்களாக கொசுத்தொல்லையால் டெங்கு , மலேரியா மற்றும் மர்ம காய்சல்கள் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் ஶ்ரீ சப்தகிரி அறக்கட்டளையின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தங்களது இன்னல்களை கூறிய நிலையில் நமது முன்னாள் சபாநாயகர்
சப்தகிரி VP சிவக்கொழுந்து* அவர்களும்,ஶ்ரீ சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர்
சப்தகிரி VPS ரமேஷ்குமார்* அவர்களும் தங்களது சொந்த செலவில்* இலாசுப்பேட்டை தொகுதி முழுவதும் கொசு மருந்து* தெளிக்கும் பணியினை இன்று உழவர் சந்தை, நேதாஜி சிலை அருகே தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து சுபாஷ் சந்திர போஸ் சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது இதை தொடர்ந்து ஶ்ரீ சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்கும் பணியினை சிறப்பாக நடைபெற்றது விழாவில் சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்