கோவை மாநகராட்சி 86வது வார்டு பகுதியில் அறிவு சார்வு மையம் மற்றும் நூலகம் ஆகியவை 99 லட்ச ரூபாய் மதிப்புள்ளான கட்டிட பணிகளை மனிதநேய மக்கள் கட்சியின் 86வது வார்டு மாமன்ற உறுப்பினர் இ.அஹமது கபீர் துவக்கி வைத்தார்.

மாணவர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் தேவையான அறிவு சார் மையம் புல்லுக்காடு பகுதியில் அமைத்து தர வேண்டும் என்று நீண்ட நெடு நாட்களாக மாமன்ற உறுப்பினர் அவர்கள் மாநகராட்சி ஆணையாளரிடம் வலியுறுத்தியதின் அடிப்படையில் அதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு கடந்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது

இதில் அரசு அதிகாரிகள். மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாநில பிரதிநிதி சாதிக் அலி.தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான். தமுமுக மாவட்ட பொருளாளர் சிராஜுதீன்.தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் அசாருதீன்.மமக மாவட்ட துணைச் செயலாளர் ஆஷிக் அகமது. மாநில செயற்குழு உறுப்பினர் கேபிள் ரபிக். ஊடகப்பிரிவு மாவட்ட பொருளாளர் ஃபைசல். பொன்விழா நகர் கிளை நிர்வாகிகள் ஜுபைர் கான். முகமது பஷீர் ‌ ஜாகிர் உசேன். அஜாஸ். ஷானவாஸ். அல் அமீன் காலனி நிர்வாகிகள் யாசர். ஜுபைர். சாகுல் அத்தா. இன்னும் ஏராளமான நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்

86வது வார்டு பகுதியில் விளையாட்டு மைதானம் , முஸ்லிம் மையவாடி, சமுதாயக்கூடம் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய நியாய விலை கடை பணிகள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரப்பட்டுள்ளது, பழுதடைந்த அங்கன்வாடிகள் புதிதாக கட்டப்பட்டு செல்ல ராவுத்தர் வீதியில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன . புதிய அங்கன்வாடி மையங்கள் அமைப்பதற்கு நிதிகள் ஒதுக்கப்பட்டு மூன்று அங்கன்வாடி மையங்கள் வார்டு பகுதியில் கட்டப்பட உள்ளன. வார்டு பகுதியில் 75சதவீதம் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது மீதமுள்ள சாலைகள் அமைப்பதற்காக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது விரைவில் அனைத்து சாலைகளும் அமைக்கப்படும். இன்று அறிவி சார் மையம் 99 லட்ச ரூபாய் மதிப்பிலான கட்டிடம் கட்டுமான பணிக்கான துவக்க விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அரசு மேல்நிலை பெண்கள் பள்ளிக்கூடம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது என்பதை மனிதநேய மக்கள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் இ.அஹமது கபீர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *