கம்பம் அருகே புத்தக வெளியீட்டு விழாவில் அனைத்து செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டியில் இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் முந்திச் சேலை என்ற புத்தக வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து செட்டியார் கள் பேரவை நிறுவன தலைவரும் பெஸ்ட் மணி கோல்டு அதிபருமான பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்து புத்தகத்தை வெளியிட்டார்
எழுத்தாளர் வேல்கணேஷ் எழுதிய முந்திச் சேலை புத்தகத்தையும் பொன்னுத்தாய் பதிப்பகத்தையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது விஞ்ஞான உலகத்தில் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் சாதனங்களால் வாசிப்பு தன்மை என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது
இது போன்ற காலத்திலும் ஒரு படைப்பாளி புத்தகத்தை எழுதி அதை முழு வடிவமாக வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல எழுத்தாளர்கள் நாளைய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தங்களின் கருத்துக்களை புத்தகத்தில் எழுதுகின்றனர் நாளைய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணங்களை பொதுமக்களுக்கு விளக்குகின்றனர்.
இந்த வகையில் நமது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த உலகெங்கும் இசை என்றால் அது இளையராஜா என்ற ஒரு இசைஞானி நமது மாவட்டம் பண்ணைபுரத்தை சேர்ந்தவர். இயக்குனர் பாரதிராஜா கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட பலர் திரை உலகிலும் புத்தகம் போன்ற படைப்பாளிகளாக இருப்பது நமது தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கக் கூடியது.
இதேபோன்று பல்வேறு எழுத்தாளர்கள் நமது மாவட்டத்தை போற்றும் வகையில் புதிய எழுத்தாளர்கள் உருவாக வேண்டும் என்றார். இந்த விழாவில் அனைத்து செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ராவின் உடன்பிறவா சகோதரர் ரகுபதி மதிமுக மாவட்ட செயலாளர் வி எஸ் கே ராமகிருஷ்ணன் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் துணைத் தலைவர் கஸ்தூரி பாஸ்கரன் பேரூராட்சி செயல் அலுவலர் பஷீர் அகமது இளநிலை உதவியாளர் பிரபாகரன் முன்னாள் மாவட்ட உதவி கல்வி அலுவலர் அரங்கசாமி எழுத்தாளர் ஜெயஸ்ரீ மதிமுக பேரூர் செயலாளர் பொன் ஆனந்தன் கிராம நிர்வாக அதிகாரி கவிதா உள்ளிட்ட தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெஸ்ட் மணி கோல்ட் பணியாளர்கள் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்