கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் விஜ்நாதம் உத்ஸவம் 2025 விழா தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகா சமஸ்தான மடத்தில் ஸ்ரீ மகா ஸ்வாமிஜி யின் 12 ஆவது ஆண்டு முடிச்சுட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி சிக் ஷனா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி பல்கலைக்கழகம் இணைந்து விஜ் நாதம் உத்ஸவம் 2025 என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சிப் போட்டி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றன
இந்த போட்டியில் மருத்துவம் பொறியியல் செவிலியர் கல்வியியல் ஆசிரியர் பயிற்சி கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி என மொத்தம் 500 கல்வி நிறுவனங்கள் பங்கு பெற்றன இந்த நிகழ்ச்சியில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மூன்றாம் இடத்தைப் பெற்று வரலாற்று சாதனை படைத்தது இதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு கேடயம் ரொக்க பரிசு ரூபாய் 5000 மற்றும் பாரட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது
இந்த பரிசினை மகா சமஸ்தான மடத்தின் பீடாதிபதி புஜ்ய ஸ்ரீ ஜெகத்குரு டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நிர்மலானாந்தா மகா சுவாமிஜி அவர்களிடம் இருந்து கல்லூரி இணைச்செயலாளர் என்.எம். ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா கல்லூரி துணை முதல்வர் முனைவர் வி. வாணி மற்றும் விரிவுரையாளர்கள் கல்லூரி மாணவிகள் இணைந்து பெற்றனர்
கல்லூரி மாணவிகள் மூன்றாம் பரிசு பெற காரணமாய் இருந்த முதல்வர் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளை கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் ஏன்.ராமகிருஷ்ணன் எம் எல் ஏ மனதார வாழ்த்தினார்.