மது போதையில் வாகனத்தை இயக்கியதால் நேர்ந்த விபரீதம்……
முன்னாள் சென்ற வேனின் பின்புறம் மோதி கோர விபத்து……
காரில் பயணித்த ஒருவர் பலி படுகாயம் அடைந்த நிலையில் மற்றொருவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி……..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உடுமலையிலிருந்து கோவை நோக்கி அஸ்வின் மற்றும் சீனிவாசன் என்ற இரண்டு பேர் கோவை நோக்கி சொகுசு காரில் வந்து கொண்டிருந்தனர். கார் புளியப்பம்பாளையம் பகுதியை கடக்க முயன்றனர் அப்போது முன்னாள் சென்ற வேனின் பின்புறம் சொகுசு காரானது பலமாக மோதியது. இதில் காரில் பயணித்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார் மேலும் கார் ஓட்டுநர் அஸ்வின் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பெரில் சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் விபத்தில் சிக்கியிருந்த அஸ்வின் மற்றும் உயிரிழந்த நிலையில் இருந்த சீனிவாசனின் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *