குச்சனூர் பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது
சின்னமனூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கன்னியம்பட்டி சி
முருகேசன் அனைவரையும் வரவேற்று பேசினார் இந்த கூட்டத்தில் பங்கேற்ற தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேசும்போது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் திமுக தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க திமுக நிர்வாகிகள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என பேசினார் இந்த கூட்டத்தில் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதொகுதி தேர்தல் பார்வையாளர் நேரு பாண்டியன் குச்சனூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.டி ரவிச்சந்திரன் உள்ளிட்ட பேரூர் திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். குச்சனூர் பேரூர் திமுக செயலாளர் திலீப் குமார் நன்றி கூறினார்