பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு ஒன்றியம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் விழா….
தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம் பங்கேற்பு…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம்,ஆதனூர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு ஒன்றியம் ,இளைஞரணிசார்பில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிரட், பால், முட்டை, பழங்கள் உள்ளிட்ட ஆரோக்கிய பொருட்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுழற்சி முறையில் வாரம் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் விதமாக ஆரோக்கியமான பொருட்கள் வழங்கும் விழா பாபநாசம் ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு பால் ,முட்டை ,பழங்கள் உள்ளிட்ட ஆரோக்கிய பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான பொருட்களை வாங்கிக் கொண்டு சென்றனர்.
இதில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் வினோத், கிழக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பிரவீன் குட்டி, இளைஞரணி இணைச் செயலாளர் ராம்குமார், மற்றும் மாவட்ட நகர கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், மகளிரணி பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.