தேனியில் பழைய பஸ் நிலையம் அருகில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் ஹிந்தி மொழியை பள்ளி மாணவ மாணவிகள் போன்ற எதிர்கால சன்னதிகள் மனதில் வலுக்கட்டாயமாக இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசின் இந்த சட்டத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேசும்போது மத்திய அரசு மும்மொழி கொள்கை சட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்த உள்ளது. எங்கள் திமுக தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியது போல மும் மொழி கொள்கை சட்டம் கொண்டு வந்தால் மாநிலத்துக்கு 5.000 கோடி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
ஆனால் 50,000 கோடிகள் தமிழக அரசிற்கு கொடுத்தாலும் மும் மொழி கொள்கை சட்டத்தை ஒரு போதும் அமல்படுத்த விடமாட்டோம் என்று எங்களது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்கள் இதன்படி தமிழ்நாட்டில் ஒருபோதும் இந்தி மொழியை திணிக்க நினைக்கும் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் எனவே மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் பேசினார்
இதன்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களும் மும் மொழி கொள்கை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பாண்டியராஜ் நகரச் செயலாளர்கள் தேனி எம் சி நாராயண பாண்டி போடிநாயக்கனூர் ஆர் புருஷோத்தமன் பெரியகுளம் முகமது இலியாஸ் முன்னாள் தேனி நகர செயலாளர் சூரியா பாலமுருகன் நகராட்சி நகர் மன்ற தலைவர்கள் தேனி வரேணு ப்பிரியா பாலமுருகன் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் பேரூராட்சி மன்ற தலைவர்கள் பூதிப்புரம் பா கவியரசு பால்பாண்டியன் தாமரைக்குளம் ச. பால்பாண்டி தென்கரை வி நாகராஜ் வடுகபட்டி நடேசன் தேவதானப்பட்டி முருகேஸ்வரி ராமையா மேல சொக்கநாதபுரம் கண்ணன் காளி ராமசாமி குச்சனூர் பிடி ரவிச்சந்திரன் மார்க்கையன்கோட்டை ஒ.ஏ. முருகன் வீரபாண்டி கீதா சசி உள்பட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் தேனி நகர செயலாளரும் திட்டக்குழு உறுப்பினருமான எம்சி நாராயண பாண்டியன் நன்றி உரையாற்றினார்