ஆட்டோவில் தவறவிட்ட 1.50 லட்சம் மதிப்பிலான ஆப்பிள் ஐ பேட் மற்றும் கல்லூரி சான்றிதழ்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை பாராட்டிய காவல் ஆய்வாளர் மற்றும் பெண் ஐ டி ஊழியர்.
திருவொற்றியூர்
மணலி புது நகரை சேர்ந்தவர் தன்னியா சந்தோஷி(29) இவர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் இவர் நேற்று மேல் படிப்புக்காக மெட்ராஸ் யூனிவர்சிட்டி சென்று விட்டு திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வந்து மணலி புது நகருக்கு தனது வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் ஏறி ஆட்டோவின் பின்புறம் தனது ஆப்பிள் ஐ பேட் மற்றும் சான்றிதழ்கள் அடங்கிய பேகை வைத்து விட்டு மணலி புதுநகர் சென்றவுடன் மறந்து இறங்கிய நிலையில் பின்னர் சுதாரித்துக் கொண்டு லேப்டாப் மற்றும் சான்றிதழ்கள் வைத்திருந்த பைகை தேடிய நிலையில் ஆட்டோ சென்று விட்டது.
பின்னர் மணலி புதுநகர் சுற்றி தனது தந்தையுடன் ஆட்டோவை தேடிய நிலையில் உயரக லேப்டாப்பில் இருந்து ஜிபிஎஸ் கருவி மூலம் தேடிய நிலையில் அது கை கொடுக்காததால் ஆட்டோ ஓட்டுனரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் தனது தந்தையுடன் மணலி புதுநகர் காவல் நிலையத்தில் வந்து காவல் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பாஸ்கரிடம் புகார் அளித்து விட்டு .பின்னர் சிசிடிவி பதிவுகளை ஆராய சென்றபோது .
1.50 லட்சம் மதிப்பிலான ஆப்பிள் ஐபேட் மற்றும் சான்றிதழ் அடங்கிய பேகுடன் காவல் நிலையம் வந்த ஆட்டோ ஓட்டுனர் சிவா குமாரை பார்த்தவுடன் மகிழ்ச்சி அடைந்து பின்னர் காவல் ஆய்வாளர் முன்னிலையில் சான்றிதழ்களுடன் இருந்த ஆப்பிள் ஐ பேட் பேகை உரிய அவரிடம் ஒப்படைத்தனர் பின்னர் ஆட்டோ ஓட்டுனரின் செயலை பாராட்டி அவருக்கு மணலி புதுநகர் காவல் ஆய்வாளர் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார் அதே போன்று லேப்டாப்பை தொலைத்த ஐடி ஊழியரும் நன்றி தெரிவித்தார் .
ஏற்கனவே இதே போன்று ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவில் தொலைத்த பொருளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நடைபெற்றதாகவும் இந்த முறையும் அந்த லேப்டாப் பேகை உரியவரிடம் ஒப்படைக்க மணலி புதுநகர் பகுதிகளில் சுற்றி தேடியதாகவும் கிடைக்காத நிலையில் மணலி புதுநகர் காவல் நிலையத்தில் வந்து ஒப்படைத்ததாகவும் ஆட்டோ ஓட்டுனர் தெரிவித்தார்.