தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாயமான் குறிச்சி கிராமம் குருவன் கோட்டை கிராமத்தில் ரூபாய் 1.15. கோடி மதிப்பீட்டில் குருவன்கோட்டை – மாயமான்குறிச்சி வரையிலான புதிய சாலை அமைத்தலுக்கான பூமி பூஜை நடைப் பெற்றது .
மாயமான்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பால்தாய் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம் திவ்யா மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குருவன் கோட்டை கிராமத்தில் ரூபாய் 1.15. கோடி மதிப்பிட்டில்
குருவன்கோட்டை – மாயமான்குறிச்சி புதிய சாலை அமைத்தலுக்கான பூமி பூஜையை தொடங்கிவைத்தார்
இந்நிகழ்வில் தொழிலதிபர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணி, ஆலங்குளம் ஒன்றிய அமமுக செயலாளரும் கோவில் கமிட்டி துணை தலைவருமான குருவை முருகன், நிர்வாகி கிருஷ்ணன், ஒருங்கினைப்பாளர் அமுதா ,
மற்றும் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பாஸ்கர்,, விஜயா , ராஜ், பால கிருஷ்னன், கன்னி விநாயகராஜ்,அதிமுக கிளை செயலாளர் மனிகண்டன், மாரிமுத்து ,ஜோதி , மற்றும் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.