திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள புலவர்நத்தம் மற்றும் பூனா இருப்பு கிராமங்களில் புலவனார் வாய்க்காலில் குறுக்கே புலவனார் மற்றும் பூனாயிருப்பு இவ்விரு நீரொழுங்கிகளும் 1985- ஆம் ஆண்டு கட்டப்பட்ட தாகும்.

இவ்விரு நீரொழுங்கிகளும் முற்றிலும் சிதிலமடைந்து விட்டது. இதனால் பாசனத்திற்கு நீரை தேக்கி பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. வெள்ளை காலங்களில் வெள்ள நீர் வடியவும் மிகவும் சிரமமாக இருந்து வந்தது. அப்பகுதி விவசாயிகள் இவ்விரு நீரொழுங்கிகளையும் சீரமைக்க தொடர் கோரிக்கையை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புலவர் நத்தம் மற்றும் பூனாயிருப்பு கிராமங்களில் புலவனார் வாய்க்காலில் குறுக்கே புலவனார் மற்றும் பூனாயிருப்பு நீரொழுங்கிகளை ரூபாய் 210 இலட்சம் மதிப்பீட்டில் மறு கட்டுமான பணி மேற்கொள்ள நீர்வளத்துறை நிர்வாக அனுமதி வழங்கியது.

அதனையடுத்து புலவனார் மற்றும் பூனாயிருப்பு நீரொழுங்கிகள் மறு கட்டுமான பணியினை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, தஞ்சாவூர் வெண்ணாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் கனகரத்தினம், உதவி பொறியாளர் தியாகேசன், சத்யா, பிரியதர்ஷினி, இளநிலை பொறியாளர் ராமமூர்த்தி, வலங்கைமான் வட்டாட்சியர் ஸ்ரீராம், ஒன்றிய ஆணையர்கள் முரளி, சிவகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் விஜயபாஸ்கர், ஞானசேகரன், ரஞ்சித், அன்பு பிரபு மற்றும் முன்னோடி விவசாயிகள் ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பூனாயிருப்பு, ராஜேந்திரநல்லூர், சன்னதி, சாரநத்தம், வயலாங்குடி, புலவர்நத்தம், வேடம்பூர், ஆலங்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *