போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் திமுக நகரச் செயலாளர் ஆர் புருஷோத்தமன் ஆகியோர் தலைமையில் தமிழகத்தின் மாபெரும் திராவிட இயக்கமான திமுகவின் தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நகராட்சி அலுவலக வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது
இந்த விழாவில் மு க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி போடி நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் புத்தாடைகளை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்கத்தமிழ்செல்வன் எம்பி வழங்கியும் நகராட்சியின் முக்கிய அங்கமான தொழிலாளர்களுடன் சமநிலையாக ஏழை எளிய பொதுமக்களான தூய்மை பணியாளர்களுடன் உடன் அமர்ந்து அசைவ உணவான அறுசுவை உணவுகளை தேனி எம்பி ருசித்து சாப்பிட்டார்
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் முனிராஜ் சுகாதார அலுவலர் மணிகண்டன் கட்டிட ஆய்வாளர் சுகதேவ் சுகாதார ஆய்வாளர்கள் சபீர் திருப்பதி திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் தேனி வடக்கு மாவட்ட ஐடி விங் தலைவர் 20 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மகேஸ்வரன் உள்பட நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் திமுக நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவாக மாநில தலைமை செயற்குழு உறுப்பினரும் நகர் மன்ற உறுப்பினருமான எம் சங்கர் நன்றி கூறினார்