துறையூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு சிலம்ப பேரணி
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம்,மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் துறையூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு சிலம்ப பேரணி நடைபெற்றது. இயக்கத்தின் தலைவர் டாக்டர் எல் சுரேஷ் தலைமையில் விழிப்புணர்வு சிலம்ப பேரணியை துவக்கி வைத்தார். இயக்கத்தின் செயலாளர் மாநில பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள் ,உறுப்பினர்கள் பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த பேரணி சிலோன் ஆபீஸ் தொடங்கி திருச்சி ரோடு வழியாக முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா வரை நடைபெற்றது.இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவர்கள் கலந்து கொண்டு போதை பொருளை ஒழிப்போம்,குடி பழக்கம் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு,போதை ஒழிப்போம் தலை நிமிர்ந்து நிற்ப்போம் போன்ற போதைப் பொருள் பற்றி விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி சிலம்பாட்டம் ஆடியபடி போதை பொருட்களின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு செய்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்