இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள இராமசாமிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சியின் கீழ் தேசிய அறிவியல் தினம் நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் அரிராமர் தலைமை வகித்தார், துணை தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி போன்ற போட்டிகளை நடத்தினர் இதில் நடுவராக ஆசிரியர்கள் கனகராஜ்,சக்திமணி,அமுதா நடத்தினர்.
பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.ஆசிரியர்கள் சுரேஷ், ஹேமலதா, ஜெயக்குமார்
ஆகியோர் விவசாயத்தில் அறிவியலின் முக்கியத்துவம் பற்றி பேசினார்கள், மற்றும் முன்னேற்றம் பற்றியும் பள்ளி மாணவர்களிடம் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் எடுத்து கூறினார்கள் நிறைவாக, ஆசிரியர் ஐயனார் நன்றி கூறினார்.