பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்

பாபநாசம் அருகே நல்லூரில் பிரசித்திபெற்ற கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் மாசி மக திருவிழா கொடியேற்றம்….
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள நல்லூரில் பிரசித்திபெற்ற கிரிசுந்தரி ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மாசி மக பிரமோற்சவ விழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
அதன் தொடக்கமாக முகம் பிறந்த நல்லூர் என்ற பெருமையை கொண்ட கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்திற்கு மஞ்சள் ,சந்தனம், தேன், பால் உள்ளிட்ட மூலப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்து மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திருவிடைமருதூர் கட்டளை தம்பிரான் திருச்சிற்றம்பலம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.