கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் உள்ள பலாமரத்து பாலம் மிகவும் பழமை வாய்ந்ததாகும் இப்பாலத்தை தாங்கி நிற்கும் கீழ்புற பகுதியில் உள்ள இரும்பு சட்டம் துருப்பிடித்து மிகவும் சிதிலமடைந்த நிலையில் பாலம் சற்று கீழ் இறங்கிய நிலையில் நீண்டகாலமாக இருந்து வருகிறது இதேபோல அக்காமலை எஸ்டேட் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தார்சாலையும் மிகவும் சிதிலமடைந்த நிலையில் நீண்டகாலமாக இருந்து வருகிறது
இந்நிலையில் அப்பகுதிகளின் அருகே தற்போது நகராட்சி மூலம் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இந்நிலையை கருத்தில் கொண்டு மிகவும் சிதிலமடைந்துள்ள பலாமரத்து பாலம் மற்றும் சிதிலமடைந்த பேருந்து நிலையம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்து விரைந்து சீர்செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், பேருந்து மற்றும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்