கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடம் அருகே மாத பூரியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது பறந்து சென்று விழுந்த கார் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர்
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சண்முகராஜ் என்பவர் கோவையிலிருந்து நாமக்கல் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பல்லடம் அடுத்த மாத போர் என்ற இடத்தை கடக்க முயன்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மைய தடுப்பில் மோதியது. மேலும் கார் பொங்கலூரில் இருந்து கோவை நோக்கிச் சென்ற மருத்துவர் பானுப்பிரியா என்பவரின் கார் மீது பறந்து சென்று விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் சண்முகராஜன் கார் தலை குப்புற கவுந்து. மேலும் அவ்வழியே சென்றவர்கள் விபத்தில் சிக்கிய சண்முகராஜ் மருத்துவர் பானுப்பிரியா மற்றும் அவரது ஓட்டுனராகிய மூன்று பேரையும் காரில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
மேலும் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.