தென்காசி மாவட்டம் தென்காசி ஒன்றியம் சுவாமி சன்னதி தெருவில் அமைந்துள்ள ஏழாவது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை துவக்க விழா நடைபெற்றது. விழாவினை தென்காசி வட்டார கல்வி அலுவலர் இளமுருகன் இனிதே துவக்கி வைத்தார்.
ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவ மாணவியர்கள் மாலை அணிவித்து கிரீடம் சூட்டி பரிசு பொருட்களுக்கு வழங்கி இனிதே வரவேற்கப்பட்டனர். மாணவ மாணவியர் சேர்க்கை முடிந்து அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை தலைமையாசிரியை மற்றும் ஏனைய ஆசிரிய பெருமக்கள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்வில் –
12 மாணவர் மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற்றது.