திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுக்கா, தொப்பம்பட்டி கிராமம், தண்டார பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி வேலை செய்து வந்த சாம்பான் மகன் நல்லான் என்பவர் கடந்த 5.7. 2015ஆம் தேதி பூளவாடியில் இருந்து தாராபுரம் வந்த அரசு பேருந்தில் இருந்து கீழே இறங்கிய போது அரசு பேருந்து ஓட்டுனர் வேகமாக பேருந்து இயக்கியதால், சின்னிய கவுண்டம்பாளையம் என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்துவிட்டார்.

இந்த விபத்து குறித்து அரசு பேருந்து ஓட்டுநர் சின்னதுரை நடத்துனர் ஈஸ்வரன் மீது தாராபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர், விபத்தில் காயம் பட்டு இறந்து போன நல்லான் அவர்களின் மனைவி சுப்பம்மாள், மகன் கன்னியப்பன் இருவரும் நஷ்டஈடு கோரி தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்

மனுவை விசாரித்த நீதிமன்றம் 5 லட்சத்தி 37 ஆயிரத்தை அரசு போக்குவரத்துவம் கழகம் செலுத்த உத்தரவிட்டது, உரிய காலத்தில் அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு தொகையை வழங்காததால் மீண்டும் சுபம்மாள் மற்றும் கன்னியப்பன் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர், நிறைவேற்றும் மனுவை விசாரித்த தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சரவணன் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் வட்டியுடன் சேர்த்து நிறைவேற்று மனு தொகை ஏழு லட்சத்து 92 ஆயிரத்து செலுத்தாத தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான அரசு பேருந்து மதுரை டு கோபி செல்வதற்காக தாராபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு பகல் சுமார் 12 30 மணிக்கு வந்தடையும் அரசு பேருந்து ஜப்தி செய்து செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார் பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்காக தாராபுரம் வழக்கறிஞர் எஸ் டி சேகர் இந்த வழக்கை நடத்தி வந்தார்

நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற அமீனா பாத்திமா அவர்கள் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார், இதனால் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *