கோனியம்மன் கோவில் தேர் திருவிழா பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில் வழங்குதல்…
கோவை கோனியம்மன் தேர் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது இதில் பாரம்பரியமிக்க கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக திருவிழாவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு சுமார் 5,000 தண்ணீர் பாட்டில் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்பட்டது பல வருடங்களாக கோனியம்மன் தேர் திருவிழாவிற்கு வருகை தரக்கூடிய இந்து பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டு வருகிறது….
இதில் கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் தலைவர் ஆசிரியர் அமானுல்லா. செயலாளர் பேராசிரியர் Dr.பீர் முகமது. முத்தவள்ளி ஜாஃபர் அலி. பொருளாளர் பக்கீர் முகமது. செயற்குழு உறுப்பினர்கள்
மு.ஆஷிக் அகமது. முகமது யூசுப். ஹிதாயத்துல்லா. முகமது இப்ராஹிம். நவ்ஷாத் அலி. காஜா உசேன். நிஜாமுதீன் . நிர்வாகிகள் மற்றும் மகாசபையாளர்கள் கலந்துகொண்டு வரக்கூடிய இந்து பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.