எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி நகரில் பெரும்பாலான இடங்களில் சரிவர குப்பைகள் அள்ளப்பட்டாமல் சுகாதார சீர்கேடு பள்ளிகள் அருகே தேங்கி கிடக்கும் குப்பைகளால் மாணவ மாணவிகள் அவதி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த 24 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக கட்டடங்களில் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகள் நகராட்சி நிரந்தரம் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்க தரம் பிரிக்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
இந்நிலையில் கடந்த நான்கு தினங்களாக சீர்காழி நகரின் பெரும்பான்மையான இடங்களில் குப்பைகள் சரிவர அல்லாமல் பிரதான இடங்களில் ஆங்காங்கே தேங்கி சிதறி கிடக்கிறது. குறிப்பாக பள்ளிகள் அருகே அதிக அளவு தேங்கி கிடக்கும் குப்பைகளின் இறந்த பூனை மற்றும் இறைச்சி கழிவுகளும் கொட்டப்பட்டு அவை அள்ளப் படாமல் ஈக்கள், கொசுக்கள் மொய்த்து அங்கு சுகாதார சீர்கேடு, நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது.
இதேபோல் குடியிருப்புகள் வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்ட பல இடங்களில் நான்கு தினமாக குப்பைகள் அள்ளப்படாமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அள்ளி தூய்மை பணி மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை .