எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் 19 ஏக்கர் விவசாயம் செய்த விவசாயிக்கு நெல் பதறாகிப் போனது கண்டு அதிர்ச்சி மீதம் உள்ள மூன்று ஏக்கர் நெற்பயிர்களை மாடுகள் விட்டு மேய்க்கும் அவலம் கண்ணீர் மல்க அரசுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மாதானம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணபிராண்டி கிராமத்தில் முருகன் என்ற விவசாயி சுமார் 19 ஏக்கர் விவசாயம் செய்தார் பின்னர் அறுவடைக்கு தயாரான நிலையில் கதிர் அறுக்கும் இயந்திரம் வைத்து அறுவடை செய்தார் அறுவடை செய்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் மாதானத்தில் உள்ள தனதுவீட்டிற்கு எடுத்துச் சென்றார் அங்கு பார்த்த போது நெல்மணிகள் காய்ந்து போய் பதராகி உள்ளது இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாய முருகன் வேளாண் துறையின் அதிகாரிகளுக்கும் விவசாய சங்க தலைவருக்கும் தெரிவித்தார் என்ன காரணத்தால் பதறாகி போனது என்று தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் ஏக்கருக்கு ரூபாய் 25,000 செலவு செய்து நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாய முருகன் செலவு செய்த முதலீடு கூட வராது என்று மிகுந்த மன அழுத்தத்ற்கு ஆளாகியுள்ளார் உடனடியாக அரசு போற்கால அடிப்படையில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்