தென்னிந்திய தேயிலை குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான்

அதிகாலை நடைபயணம் மேற்கொண்ட பொதுமக்களுக்கு தேநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ,மாணவிகள்

தென்னிந்திய தேயிலையின் ஆரோக்கிய பயன்கள் குறித்து கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு வாக்கதான் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

தென்னிந்திய தேயிலையின் வரலாறு மற்றும் பண்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் தேயிலை விழிப்புணர்வு நடை பயண பேரணி நடைபெற்றது..

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒருங்கிணைத்த இதில் ஒருங்கிணைப்பாளர் தீபக்‌ஷா வாக்கத்தானை துவக்கி வைத்தார்…

இதில் இயற்கையாக விளையும் தேயிலை தேநீரில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் போலிக் அமிலம், பொட்டாசியம், ப்ளுரின், மேங்கனீஸ் போன்ற தாது பொருட்கள் மற்றும் ஆன்டிஆக்சிடன்ஸ் உள்ளிட்டவை கிடைக்கின்றன.

அது மட்டுமல்லாமல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதை குறைக்க தேநீர் அவசியமாக ஒன்றாக உள்ளது.

இது குறித்த ஆரோக்கிய பயன்களை ஏற்படுத்தும் விதமாக கோவை பந்தய சாலை பகுதியில் நடைபெற்ற இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று தேயிலை தேநீர் உடல் நலத்திற்கு மிகவும் பாதுகாப்பானது, அதை தினமும் அருந்துவதால் புத்துணர்வு கிடைக்கும்,இதன்மூலம் தேயிலை விவசாயிகளை பாதுகாக்க முடியும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி சுமார் மூன்று கிலோமீட்டர் வரை நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பந்தய சாலை பகுதிக்கு நடைபயணம் வந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக தேநீர் விநியோகம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *