திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி சண்முகபுரம் நடுநிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து 18.40 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் மற்றும் 17 ஆவது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து 11.80 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம்.
பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திறந்து வைத்தார் . இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் வேலுமணி, நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, நகர மன்ற உறுப்பினர் மீனாட்சி தேவி, நகர்மன்ற உறுப்பினர்.செபாஸ்டின் மற்றும் பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
