இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருவாரூர் கீழவீதி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
திருவாரூர் கீழவீதியில் உள்ள பஞ்சின் மெல்லடியாள் சமேத தூவாயநாதர் கோவிலில் இன்று மாசி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு சிவகாமி அம்மன் சமேத ஆனந்த பைரவ கோலாகல நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. அருள்மிகு பால ஐயப்பனுக்கு ஏகதீன இலட்சார்ச்சனையை விழா நடைபெறவுள்ளது.