செங்குன்றம் செய்தியாளர்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாதவரம் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மகளிர் விழா மாதவரம் பகுதி தலைவர் விஜய் இளங்கோ தலைமையில் கொண்டாடப்பட்டது.
இதில் மாநில துணைச் செயலாளர் பிரபு மற்றும் மகளிர் அணியை சார்ந்த பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள். நிகழ்வில் சமூகத்தில்ஸபெண்களின் முக்கியத்துவத்தை குறித்தும் , அவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டு அவர்களை ஒருவருக்கு ஒருவர் பாராட்டு பெருமகிழ்ச்சியடைந்தனர் இறுதியாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் பரிமாறப்பட்டது.மேலும், மாதவரம் தொகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களை புதிதாக தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைத்துக் கொண்டனர்